Sunday 20 August 2017

தேசிய இயக்கமானது 'அபிராம்'


(ரா.தங்கமணி)

ஈப்போ-

பேராக் மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு வழிநடத்தப்பட்டு வந்த அபிராம் இயக்கம் தேசிய இயக்கமாக உருமாறியுள்ளது என அதன் தலைவர் சண்முகம் கிருஷ்ணன் தெரிவித்தார்.

11.2.2016இல் தொடங்கப்பட்ட பேராக் மாநில அபிராம் இயக்கம் தற்போது தேசிய இயக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 17.8.2017 முதல் இவ்வியக்கம் தேசிய இயக்கமாக செயல்பட தொடங்கியுள்ளது. அதற்கேற்ப 7 மாநிலங்களில் தற்போது தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேராக் மாநிலத்தில் 25 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் உள்ள நிலையில் 2,500 உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 50,000 பேரை உறுப்பினர்களாக சேர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

இங்கு ஏகேஎஸ் மண்டபத்தில் தேசிய செயலவை உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் இயக்கத்தின் ஆலோசகர் டத்தோ டாக்டர் ஏகேஎஸ் சக்திவேல், அமுசு ஏகாம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment