Saturday 5 August 2017

'ஆவி வாக்காளர்கள்' 120 பேர் வாக்களிக்க முடியாது



ஈப்போ-
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்ந்தொகுதியில் தங்களை புதிய வாக்காளர்களாக பதிந்து கொண்ட பேராக் மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ உட்பட 120 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் தங்களது பழைய தொகுதிகளிலே வாக்காளர்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மலேசிய தேர்தல் ஆணையத்தின்  2017ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இடம்பெற்றுள்ள வாக்காளர் பட்டியலில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் 3,400க்கும் மேற்பட்டோர் தொகுதிகளை மாற்றி வாக்காளர்களாக பதிந்துள்ளதை அடுத்து இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.கேசவன் 'ஆவி வாக்காளர்கள்' அதிகமான இடம்பெற்றுள்ளனர் என பேராக் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.

இது குறித்து இன்று நடைபெற்ற பொது விசாரணையில் , டத்தோ வ.இளங்கோ, அவரின் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட 120 பேரின் விண்ணப்பங்கள் செல்லுபடியாகாது என பேராக் மாநில தேர்தல் ஆணையத் தலைவர் முகமட் நஸ்ரி இஸ்மாயில் தனது விசாரணை முடிவில் தெரிவித்தார்.

இதனால் டத்தோ இளங்கோ உட்பட 120 பேர்  வரும் பொதுத் தேர்தலில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளிக்க முடியாது என தீர்மானிக்கபட்டது.

இது குறித்து கருத்துரைத்த வழக்கறிஞரும் சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன், தேர்தல் ஆணையம் வெளியிட்ட பெயர் பட்டியலை ஆய்வு செய்தபோது சித்தியவான், ஈப்போ, சுங்காய் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த பலர் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதிக்கு தங்களை வாக்காளர்களாக மாற்றி கொண்டனர்.

ஆனால், இத்தொகுதியில் வசிக்காமல் தங்களை வாக்காளர்களாக மாற்றி கொண்டதில் அதிருப்தி அடைந்த கேசவன், இரண்டு வார இடைவெளியில் 360 தகவல்களை கண்டறிந்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தோம்.

அதன் அடிப்படையில் 120 பேர் முதற்கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் இதில்  டத்தோ இளங்கோவும் அவரின் இரு மக்கன்கள் மட்டுமே விசாரணைக்கு வந்தனர். எஞ்சியுள்ள 260 பேர் அடுத்தக்கட்ட விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தவறிழைத்தது உறுதிபடுத்தப்பட்டால் சிறைத் தண்டனை, 5,000 வெள்ளி அபராதம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லாததால் இதனை நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்ல எத்தனித்துள்ளோம்.

தவறான தகவல்களை வழங்கி தங்களை வாக்காளர்களாக மாற்றி கொண்டதில் பல்வேறு மோசடிகள் நிகழ்த்தப்பட்டிருப்பதோடு தேர்தல் ஆணையத்தையும் தேசிய பதிவு இலாகாவையும் ஏமாற்றியுள்ள இவ்விவகாரம் குறித்து போலீசில் புகார் செய்யவுள்ளோம் என சிவநேசன் கூறினார்.

No comments:

Post a Comment