Thursday 10 August 2017

பிள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டுங்கள் –டத்தோ டாக்டர் சேக் உசேன் மைடின்



(சுகுணா முனியாண்டி)

நிபோங் திபால்--

பிள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டுங்கள் ,பிள்ளைகள் தவறான பாதைக்கு செல்வதற்கு பெற்றோர்களே காரணமாகாதீர்கள் பெற்றோர்களின் அணுகுமுறையாலே மாணவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் என்று டத்தோ டாக்டர் சேக் உசேன் மைடின் வலியுறுத்தினார்,

பினாங்கு மாநில கல்வி முன்னேற்ற கழகம் ஏற்பாட்டில் 10 ஆம் ஆண்டு கல்வி யாகத்திற்கு பின்னர் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்ட அவர் சிறப்புறையாற்றினார்
மாணவர்கள் தான் நாட்டின் கண்கள், நாடு சுபிட்சமாக அமைவதற்கு மாணவர்கள் என்ற தூண்கள் மிகவும் அவசியமானதாகும். அவர்களை அரவணைத்து  வழிநடத்துவது பெற்றோர்களின் கைகளில் தான் உள்ளது என்றார்.

மாணவர்களை அன்புடன் அரவணைத்து ஆதரவாக இருக்கும்போது அவர்கள் தவறான வழியில் செல்வதற்கு வய்ப்புகள் நிச்சயம் இருக்காது என கூறிய அவர், மாணவர்கள் தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப வழிநடத்தி செல்ல கூடிய காலகட்டத்திலும் நாம் இருக்கின்றோம் என அவர் அறிவுறுத்தினார்.
தாய்-தந்தையரின் ஆலோசனைகளும் தூண்டுகோலும் மட்டுமே தன்னை வெற்றியாளனாக அமைத்தது என கூறிய அவர், அதுபோல ஒவ்வொரு
மாணவரும் தங்களது வாழ்க்கையில் சிறப்படைய வேண்டும் என்றார்.

அண்மையில் யுபிஎஸ்ஆர், பிடி3 ,எஸ்பிஎம் ஆகிய தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை கூறிக் கொண்ட அவர், பினாங்கு மாநிலத்தில் மாணவர் சமுதாயத்திம் மேம்பாட்டுக்கு மிக சிறப்பாக செயல்பட்டு வரும் பினாங்கு மாநில மாணவர் முன்னேற்ற கழகத்திற்கு 5,000 வெள்ளியை காசோலையாக வழங்கினார்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட  அனைத்து பிரமுகர்களும் மாலை பொன்னாடை அணிவித்து நினைவு சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment