Friday 18 August 2017

அதிகாரப்பூர்வமாக தொடங்கியது பிஐசிசி-இன் 80ஆம் ஆண்டு நிறைவு விழா


(ரா.தங்கமணி)

ஈப்போ-

பேராக் மாநில இந்தியர் வர்த்தக சபையின் (பிஐசிசி)  80ஆம் ஆண்டு நிறைவை விழாவையும் கலை, கலாச்சார நிகவையும்  பேரா மாநில சட்டமன்ற சபாநாயகர் திருமதி எஸ்.தங்கேஸ்வரி குத்துவிளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இன்று தொடங்கி 20ஆம் தேதி காலை 10.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை நடைபெறவுள்ள லிட்டில் இந்தியாவ் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றிய  அவர், 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் பேராக் இந்தியர் வர்த்தக சபையின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

நாம் பொருளாதாரத்திலும் தலை நிமிரச் செய்ய வேண்டும். அதற்கேற்ப நமது சமுதாயத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வர்த்தகர்களும் வணிகர்களும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும். அதற்கான துரித நடவடிக்கைகளை பேரா இந்தியர் வர்த்தக சபை முன்னெடுக்க வேண்டும் என் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய பேரா இந்தியர் வர்த்தக சபையில் தலைவர்  எம்.கேசவன், 1937ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சபை பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இன்று வெற்றிகரமாக ஓர் இயக்கமாக உருவெடுத்துள்ளது.


அதற்கு சபையின்  முன்னாள் தலைவர்கள், செயலவை உறுப்பினர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள்தான் காரணமாகும்.

நமது சமுதாயம் கல்விக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை போல தொழில்துறையில் வெற்றி பெறுவதற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெற்ற சமுதாயமாக திகழ முடியும். அதற்கு தற்போதுள்ள தொழில் வல்லுனர்கள், வணிகர்கள் ஆகியோர் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருந்து கைகொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அரசு சார்புடைய நிறுவனங்களின் கூடாரங்களும் வணிக நிறுவனங்களின் கூடாரங்களும் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சியில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ என்.முனியாண்டி, மலேசிய உலோக, மறுசுழற்சி சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி, ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர் சங்கத்தின் தலைவர் திருமதி கல்யாணி, டத்தோ என்.மாரிமுத்து, மிம்மி இயக்கத் தலைவி திருமதி ராமநாயகம், பேரா மாநில மகளிர் மேம்பாட்டு இலாகா இயக்குனர் சு.கெளரவம்மா, சுங்கை சிப்புட் ம இகா செயலாளர் கி.மணிமாறன், பேரா மாநில மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயராமன், அமுசு ஏகாம்பரம், வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சுல்தான் அப்துல் காதீர் உட்பட சபை உறுப்பினர்களும் இயக்கங்களின் தலைவர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment