Thursday 10 August 2017

'தெரு விளக்கு சீரமைப்பு' குடியிருப்புப் பகுதியில் வெளிச்சம் படர்ந்தது



(ரா.தங்கமணி)
ஜாலோங்-

சுமார் மூன்று ஆண்டுகளாக தெரு விளக்கு பழுதடைந்து இருளில் சூழ்ந்து கிடந்த   கம்போங் தெர்சுசூன் ஜாலோங் குடியிருப்புப் பகுதிக்கு சுங்கை சிப்புட் தொகுதி மஇகா  செயலாளர் கி.மணிமாறனின் முயற்சியால் தீர்வு பிறந்துள்ளது.

தெரு விளக்குகள் இல்லாமல் இங்குள்ள மக்கள் பெரும் இன்னலை எதிர்நோக்குகின்றனர் என இங்குள்ள மக்கள் மணிமாறனிடம் புகார் தெரிவித்தனர்.


எரிபொருள், பசுமை நீர்வள துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி துணையோடு மணிமாறன் மின்சார வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். துரித நடவடிக்கையில் இறங்கிய மின்சார வாரியம் இங்கு தெரு விளக்கை பொருத்தி இருள் சூழ்ந்து கிடந்த இடத்தில் வெளிச்சம் படரவிட்டது.
தெரு விளக்கு பொருத்தியன் வழி பள்ளி மாணவர்களுக்கும் தொழில்சாலை ஊழியர்களுக்கும் இரவு நேரத்தில் ஒரு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.\


ஜாலோங் சட்டமன்றத் தொகுதி எதிர்க்கட்சி வசமாக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மஇகா தோல்வி கண்டதில்லை. அவ்வகையில் இப்பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காண முயற்சித்த டத்தோஶ்ரீ தேவமணிக்கும், மின்சார வாரியத்திற்கும் ஊராட்சி மன்றத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மணிமாறன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment