Tuesday 22 August 2017

2008 'சுனாமி' மீண்டும் நிகழலாம்?


ரா.தங்கமணி
கோலாலம்பூர்-

விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் '2008 சுனாமி' மீண்டும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மக்களவையில் பெரும்பான்மையை நிரூபித்து வந்த தேசிய முன்னணி முதன் முதலால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கச் செய்த தேர்தலே 2008ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தல் ஆகும்.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தலைநகரில் நடைபெற்ற இந்தியர்கள் உரிமைகுரல் போராட்டமான 'ஹிண்ட்ராஃப்' ஏற்படுத்திய தாக்கம் தேசிய முன்னணியையே ஆட்டம் காணச் செய்தது.

அதன் தொடர்ச்சியாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்  தேர்தலிலும் தேசிய முன்னணி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவிக்கிறது.

இந்நிலையில் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்தில் நடைபெற்றாலும் எதிர்க்கட்சி கூட்டணியான 'நம்பிக்கை கூட்டணி' (பக்காத்தான் ஹராப்பான்) பல இடங்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

குறிப்பாக, கடந்த 2008ஆம் ஆண்டில் சிலாங்கூர், கெடா, பேராக், பினாங்கு, கிளந்தான் போன்ற மாநிலங்களை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றியது போல் மீண்டும் பல மாநிலங்களை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றக்கூடும் என கருதப்படுகிறது.

முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் வருகையால் தற்போது பலமடைந்து கொண்டிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment