Friday 25 August 2017

எந்நேரத்திலும் 14ஆவது பொதுத் தேர்தல்- பிரதமர் நஜிப்

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என்பதால் டிசம்பர் 5 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் அம்னோ பொதுப் பேரவை ஒத்தி வைக்கப்படலாம் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.

எந்நேரத்திலும் நடைபெறலாம் என கருதப்படும் பொதுத் தேர்தலுக்கு அம்னோ பேரவை தேதிகள் இடையூறாக இருந்தால்  அது ஒத்திவைக்கப்படலாம் என  புத்ரா உலக வாணிப மையத்திலுள்ள டத்தோ ஓன் மெனாராவில் நடைபெற்ற உச்சமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அம்னோவின் தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார்.

டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கும் அம்னோ மகளிர், இளைஞர், புத்ரி பிரிவினரின் மாநாடு டிசம்பர் 6ஆம் தேதி முடிவடையும். அதன் பின்னர் 7 முதல் 9ஆம் தேதி வரை அம்னோவின் பொது பேரவை நடைபெறும் என நிகழ்ச்சி நிரலில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இந்த கூட்டத்தில் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, அம்னோவின் உதவித் தலைவர் ஹிஷமுடின் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment