Sunday 13 August 2017

14ஆவது பொதுத் தேர்தலில் அதிகமான பெண் வேட்பாளர்கள்


கோலாலம்பூர்-

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் அதிகமான பெண்களை வேட்பாளராக களமிறக்க அம்னோ திட்டமிட்டுள்ளது என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

'நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் பெண்கள் பற்றிய நமது எண்ணங்களையும் நடத்தைகளையும் மாற்றி கொள்ள வேண்டும். ஏனெனில் கடுமையான உழைப்பை வழங்கிடும் பெண்களை வெறுமனே புகழாமல் அவர்களுக்கு 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட வாயுப்பு வழங்க வேண்டும்.

பெண்கள் அனைவரும் நிபுணத்துவம் அடைந்து விட்டார்கள்., அவர்களால் நாட்டில் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். எனவே கொள்கைகளை உருவாக்குவதில் 30 விழுக்காடு பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் இதனை செய்ய அம்னோ முடிவெடுத்துள்ளது என பத்து பஹாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கூட்டத்தில் டத்தோஶ்ரீ ஸாயிட் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment