Tuesday 1 August 2017

துன் மகாதீர் ஓர் 'இந்தியர்' - டத்தோஶ்ரீ ஸாஹிட் பகிரங்க குற்றச்சாட்டு



கோலாலம்பூர்-
மலேசியாவை 22 ஆண்டு காலம் ஆட்சி புரிந்து வந்த துன் டாக்டர் மகாதீர் ஓர் இந்தியர்  ஆவார். தனது 22 ஆண்டுகால பிரதமர் பதவியின் வாயிலாக அரசியல் ரீதியாக துன் மகாதீர் மலாய்க்காரர்களை ஏமாற்றி வந்துள்ளார் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மாட் ஸாயிட் ஹமிடி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

அவரின் பெயர் மகாதீர் த/பெ இஸ்கண்டார் குட்டி என அவரது அடையாள அட்டையில் உள்ளதை பாருங்கள். தேசிய பதிவிலாகாவின் புள்ளி விவரப்படி பெற்ற ஆதாரம் இதுவாகும் என தனது கைத்தொலைபேசி நீட்டி காண்பித்தார்.

அனால் லெலாக்கி (/பெ) என்று அவரது அடையாளக் கார்டில் குறீயீடு உள்ளதை பாருங்கள். நமக்கு அதுபோன்ற குறியீடு கிடையாது. மலேசிய இந்தியர்களுக்கு இதுபோன்ற குறியிடு உள்ளது. குட்டி என்பது தமிழ் பெயர். மலாய்க்காரர்கள் என்றால் அனாக் லெலாக்கி வர வேண்டிய இடத்தில் 'பின்' என்ற அரபுச் சொல் இடம்பெற்றிருக்கும். நான் சொல்வதை அரசியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் சிந்தித்து பாருங்கள்.

இஸ்கண்டார் குட்டியின் மகன் என்ற காரணத்தினால்தான் அவர்கூட ஒருமுறை மலாய்க்காரர்கள் மறதிக்கு சொந்தமானவர்கள் என கூறியிருக்கிறார். அவர் அப்போது கூறியது சரியாகவே படுகிறது.

இத்தனை ஆண்டுகாலமும் மலாய்க்காரர்களை மலாய்க்காரர் அல்லாதவர் அடக்கி வந்து ஆட்சி செய்திருக்கிறார். மகாதீர் மலாய்க்காரர் அல்லர் என்பதை மலாய்க்காரர்களே மறந்து போயிருக்கிறார்கள். நமக்கெல்லாம் மறதி உள்ளது என அன்று அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.


அம்னோ என்பது தேனீ. நாமெல்லாம் தேன்கூடு. தேனீக்கள் பறந்து விட்டால் தேன்கூடு ஒரு பக்கமாக தூக்கியெறியப்படும். இப்போது தேனீக்கள் பறந்ததால் நாம் தனித்து விடப்பட்டிருக்கிறோம்

இத்தனை காலமாக தேன்கூட்டின் பலனை ஒரு தேனீ எடுத்து சென்றுள்ளது. மலாய்க்காரர்களான நாம் 22 ஆண்டு காலமாக மலாய்க்காரர் அல்லாத ஒருவரின் கைகளில் ஒப்படைத்திருக்கிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என கிளானா ஜெயாவில் நடைபெற்ற அம்னோ தொகுதி மாநாட்டில் ஆற்றிய உறையில் உள்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ ஸாயிட் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment