கோலாலம்பூர்-
போஸ்
பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.எம்.எஸ்.
சரவணன் இயக்கத்தில் கடந்த நேற்று வெளியீடு கண்டது ‘மாமா மச்சான்’ உள்ளுர் திரைப்படம். சிறப்பான முறையில் அனைவரையும் கவரும் வகையில் படத்தின் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்
இயக்குனர் சரா. இத்திரைப்படம் சிரம்பான், கோலாலம்பூர், சிலாங்கூர் என சில பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில்
ஆர்.எம்.எஸ். சராவுடன் காந்திபன் என்ற
பென் ஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன்
கல்பனா ஸ்ரீ, ஷாமினி, சுப்ரா ஜி,
ஜெகன், எம்.சிவா,
அகோதரான், லோகன் என அதிகமானோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மேலும், இப்படத்தை பற்றி கூறுகையில் இரு நண்பர்கள் தங்கள் வாழ்க்கையில் தினசரி செய்யும்
சேட்டைகளையும் தவறான நடவடிக்கை ஒரு நாள் ஆபத்தில் முடியும் என்பதையும் நகைச்சுவையாக
படமாக்கியுள்ளார் இயக்குனர்.
இடைவிடாத
காமெடி நிறைந்த படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதுவரையில் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இத்திரைப்படம்.
இத்திரைப்படத்தின்
பின்னனி இசையை மான்சர் சிங் சிறப்பாக அமைத்துள்ளார். இப்படத்தின் 'ஏங்குதே' எனும் பாடலை டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர் பாடியுள்ளார்.
இப்பாடலை இசையமைப்பாளர் லாரன்ஸ் இராமசாமி இசையமைத்துள்ளார்.
முதல் முறையாக மலேசியத் திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவில் அதிகமான விளம்பரங்கள் செய்து மக்கள் மனதில் படத்தை பதிவு செய்துள்ளனர். தினசரி சமூக ஊடகங்களில் பட்டையை கிளப்பி வருகிறது என்றால் அது மிகையாகஅது. 'மாமா மாச்சான்' திரைப்படத்தை மேலும் மக்களிடையே கொண்டு செல்ல மாமா மாச்சான் திரைப்பட ஸ்டிக்கர் பொறித்த வாகனம் நாடு முழுவதும் சுற்றி வர ஏற்பாடு செய்துள்ளார் இத்திரைப்படத்தின் இயக்குனர் சரவணன். இதுமட்டுமில்லாமல் 9 மாநிலங்களில் மாமா மாச்சான் திரைப்படக்குழுவினர்கள் மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் செய்து மக்களிடையே இப்படத்தைப் பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியீடு கண்டுள்ள இத்திரைப்படத்தை பார்த்து நீங்களும் வயிறு குலுங்க சிரிங்க. ‘நாசி லெமாக் சாப்பிடனும்னா உறப்பை தாங்கிதான் ஆகனும், மாமா மாச்சான் திரைப்படத்தை பார்க்கனும்னா தியேட்டருக்கு போய்தான் ஆகனும்”.
இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி அண்மையில் தலைநகரிலுள்ள என்யூ சென்ட்ரலின் திரையரங்கில் வெளியிட்டனர். இந்நிகழ்வுக்கு மனிதநேய மாமனி அம்மா ரத்னவள்ளி அம்மையார், டத்தோ சசி தலைமையேற்றனர்.
உள்ளூர் திரைப்படங்களுக்கு முழு ஆதரவை வழங்குங்கள். அவர்களது படைப்புகளுக்கு ஆதரவளிப்போம். அனைவரும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய அளவில் மாமா மாச்சான் திரைப்படம் அமைந்துள்ளது. ஆர்.எம்.எஸ். சராவுக்கும் காந்திபனுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். மலேசியத் திரைப்படம் என்றுமே மலேசியா திரைப்படம்தான் இந்தியத் திரைப்படம் இந்தியா திரைப்படம்தான். ஆகையால் இரு நாட்டின் திரைப்படங்களையும் ஒப்பீடு செய்யாதீர்கள் என்று ரத்னவள்ளி அம்மையார் மேலும் கூறிப்பிட்டார்.
இத்திரைப்படத்திற்கு ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினர்களுக்கும் திரைப்பட பின்னணியில் பணிபுரிந்த அனைத்து தரப்பினரும் சிறப்பு செய்து கெளரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment