Tuesday 1 August 2017

முதியோர் சமூகநல இயக்கத்திற்கு விவேக தொலைகாட்சி -யோகேந்திர பாலன் அன்பளிப்பு


சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் வட்டாரத்தில்  முதியோர்களுக்கு சிறப்பான சேவையாற்றி முதியோர் சமூகநல இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஏதுவாக மதிலன் நிறுவனத்தின் உரிமையாளரும் பூச்சோங் தொழிலதிருபமான யோகேந்திர பாலன் விவேக தொலைகாட்சியை (Smart TV) அன்பளிப்பாக வழங்கினார்.

இணையமயமாகிவிட்ட தற்போதைய காலத்தில் சித்த மருத்துவம், தேக பயிற்சி, மருத்துவ தகவல்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் போன்றவை இணையதளங்களில் அதிகமாக இருக்கின்றன.

அவற்றை இங்குள்ள முதியோர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விவேக தொலைகாட்சி வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார் இயக்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன்.

இவரின் கோரிக்கையை ஏற்ற யோகேந்திர பாலன்  விவேக தொலைகாட்சியை வழங்கியதோடு வேண்டிய உதவிகளையும் செய்வதாக கூறினார்.

இந்த நிகழ்வில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து உட்பட இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment