Monday 21 August 2017
நவீன் கொலை வழக்கு: மருத்துவ அறிக்கை கிடைக்காததால் வழக்கு ஒத்திவைப்பு
ஜோர்ஜ்டவுன்-
நாட்டையே உலுக்கிய தி.நவீனின் வழக்கு விசாரணை செவிமடுப்பு மருத்துவ அறிக்கை கிடைக்காததால் செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பலமான காயங்களுக்கு இலக்கான நனீவின் நண்பர் தி. பிரவீனின் (வயது 19)மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறாததால் இந்த வழக்கை இன்னும் தொடர முடியாது என அரசு தரப்பு துணை வழக்குரைஞரான ஃபாரா அய்மி ஸைனுல் அன்வார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஜூன் 9ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான நவீன் மரணமுற்றதோடு பிரவீன் கடுமையான காயங்களுக்கு இலக்கானார். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவடைந்த நிலையில் மரணமடைந்தார்.
இவ்வழக்கில் ஜே.ரகுசுதன் (18), எஸ்.கோகுலன் (18), 17, 16 வயதுடைய இரு சிறுவர்கள் என நான்கு பேர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு அரசு தரப்பு துணை வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி செப்டம்பர் 29ஆம் தேதி வழக்கு செவிமடுப்பை ஒத்திவைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment