ரா.தங்கமணி
சமூக ஊடகங்களில் ஒன்றை பதிவிட்டாலே வைரவாகி விடும் இன்றைய நிலையில் தற்போது பார்ப்போரை கண் கலங்க வைக்கும் வகையில் குரங்கு ஒன்றின் புகைப்படம் வைரலாகி உள்ளது.
காய்கறி மார்க்கெட்டில் அமர்ந்திருக்கும் பாட்டியும் அவரின் அருகில் அமர்ந்திருக்கும் குரங்கும் தான் இந்த புகைப்படத்தின் சிறப்பம்சம்.
அந்த பாட்டி குரங்கிடம் ஏதோ புலம்புவது போலவும் அதற்கு அந்த குரங்கு ஆறுதல் கூறுவது போலவும் அமைந்துள்ள உணர்ச்சிகரமான செயல்கள் தான் இந்த புகைப்படம் வைரலாவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த புகைப்படத்தை எடுத்தது யார்? எங்கே எடுத்தது? என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர்களிடம் மரித்து போன மனிதநேயம் அந்த குரங்கிடம் காணப்படுவது மனித சமூகத்தின் இன்றைய வாழ்வியல் சூழலை ஒருமுறை சிந்திக்க வைக்கிறது.
No comments:
Post a Comment