Saturday 24 March 2018

கடுமையான காற்று,மழை; வீட்டு கூரைகள் பறந்தன


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நேற்று பெய்த  கடுமையான மழை, காற்றினால் இங்கு தாமான் துன் சம்பந்தன், தாமான் கிளேடாங் பகுதியிலுள்ள பல வீடுகளின் கூரைகள் பறந்தன.

ஒரு மணி நேரம் நீடித்த கடுமையான காற்று, மழையினால் பெரும்பாலான  வீடுகள் சேதமடைந்தன.

சம்பவத்தை கேள்வியுற்ற ஜாலோங் கெராக்கான் ஒருங்கிணைப்பாளர் டத்தோ டான் லியான் யோ, தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன், தாமான் துன் சம்பந்தன் மஇகா கிளைத் தலைவர் இளங்கோ, தொகுதி மஇகா மகளிர் பிரிவுத் தலைவி விஜயகுமாரி, எஸ்ஐடிஎஃப் அதிகாரி பிரகாஷ் உட்பட பலர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு சமூகநல உதவிகள் ஏற்பாடு செய்வதாக கூறினர்.

No comments:

Post a Comment