கோலாலம்பூர்-
கல்வி கேள்விகளில் மாணவச் சமுதாயம் சிறந்து விளங்கிட வேண்டும்
எனும் உன்னத நோக்கில் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்குகளை ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறது
இராஜ யோக சக்தி மிகுந்த ஆழ்நிலை தியான இயக்கம் (ஆர்பிடி). இவ்வாண்டும் இது தொடர வேண்டும்
என்ற அடிப்படையில் அண்மையில் மலாயா பல்கலைக்கழகத்தில் ஆர்பிடி இயக்கம் மிகச்
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
இந்தக் கல்வி கருத்தரங்கில் பங்கெடுத்த சில மாணவச் செல்வங்கள் 'மை பாரதம்' மின்னியல் ஊடகத்துடன் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
டேஷ்னா சந்திரன்
யோக சக்தியின் அற்புதங்களையும் ‘படிக்கும் முறை” (ஸ்தடி மெதட்)
பயிற்சியை முறையாகப் பயன்படுத்துவதினால் ஏற்படும் மாற்றங்களை முழுமையாக உணர்ந்துள்ளேன். பிரத்தியோக
வகுப்புகளுக்கு செல்லாமலேயே டத்தோஶ்ரீ குருஜி வழங்கிய படிக்கும் முறை பயிற்சியை துணைக்கொண்டு
கடந்த எஸ்பிஎம் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 11ஏ பெற்று குடும்பத்திற்கும் பள்ளிக்கும்
பெருமைச் சேர்த்துள்ளேன்.
இப்போது ஆஸ்திரேலியா மெட்ரிகுலேஷன் அனைத்துலக கல்வி மையத்தில் பயில்கிறேன். மாணவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும் இந்தக் கல்வி கருத்தரங்கில் இரண்டாம் முறையாக கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டியதற்கு டத்தோஶ்ரீ குருஜிக்கும் டத்தின்ஶ்ரீ ஜி-க்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் கிள்ளானைச் சேர்ந்த டேஷ்னா சந்திரன் கூறினார்.
இப்போது ஆஸ்திரேலியா மெட்ரிகுலேஷன் அனைத்துலக கல்வி மையத்தில் பயில்கிறேன். மாணவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும் இந்தக் கல்வி கருத்தரங்கில் இரண்டாம் முறையாக கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டியதற்கு டத்தோஶ்ரீ குருஜிக்கும் டத்தின்ஶ்ரீ ஜி-க்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் கிள்ளானைச் சேர்ந்த டேஷ்னா சந்திரன் கூறினார்.
பவித்திரன் சித்திரைச்செல்வன்
ஈப்போ விமான நிலையத்திலுள்ள விமான பயிற்சி பட்டறையில் விமானப் பராமரிப்பு பொறியியல் துறையில் பயில்கிறேன். யோக சக்தியை எடுத்த பிறகும் படிக்கும் முறை பயிற்சியை முறையாக
பயன்படுத்தியதில்லை. இந்தக் கல்வி கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் இதன் முக்கியத்துவத்தை
உணர்த்திய பின்னரே படிக்கும் முறை பயிற்சியை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கினேன்.
இதன் வாயிலாக, கடந்த எஸ்பிஎம் தேர்வில் 6ஏ பெற்றேன். இதுவரையில் பி தேர்வு நிலையைக்கூட
அடையாத நான், பயிற்சியை துணைக்கொண்டு ஏ நிலையை அடைந்துள்ளேன். எனக்குள் இருந்த ஆற்றலை
வெளிகொணர வைத்தது யோக சக்தி என்று கிள்ளான், காப்பாரைச் சேர்ந்த பவித்திரன் சித்திரைச்செல்வன்
கூறினார்.
- மோனீஸ் மஹாவீர் முரளிதரன்
பண்டார் உத்தாமா டாமான்சாரா (3) ஐந்தாம் படிவம் பயில்கிறேன்.
தேசிய மொழி, வரலாறு, நன்னெறிக் கல்வி போன்ற பாடங்களில் பின்தங்கியிருந்த நான், இந்தக்
கல்வி கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர், இந்த மூன்று பாடங்களிலும் சிறப்பு தேர்ச்சி
பெற வேண்டும் என ஆர்வமும் நம்பிக்கையும் பிறந்துள்ளது. முன்பெல்லாம் ஒரு பாடத்தை கற்பதற்கு
நீண்ட நேரம் செலவழிப்பேன். ஆனால், இப்போது, படிக்கும் முறை பயிற்சியை துணைக்கொண்டு
விரைவாக பயில்கிறேன். நேரத்தை வீனடிக்காமல் விரைவாக பயின்றாலும் தெளிவாகவும் முழுமையாகவும்
புரிந்து கொள்வதற்கு ஏதுவாக அமைகிறது இந்த பயிற்சி என்று கோத்தா டாமான்சாராவைச் சேர்ந்த
எஸ்பிஎம் மாணவன் மோனீஸ் மஹாவீர் முரளிதரன் கூறினார்.
- டிவ்யா கோஷிகா இந்திரன்
சுல்தான் அப்துல் சாமாட் இடைநிலைப்பள்ளியில் பயில்கிறேன். இந்தக்
கல்வி கருத்தரங்கின் வாயிலாக, கேள்விகளுக்கு முறையாகப் பதிலளிக்கும் யுக்திகளை அறிந்து
கொண்டேன். கடந்த யூபிஎஸ்ஆர் தேர்வில் தேசிய மொழி பாடத்தைத் தவிர அனைத்து பாடங்களிலும்
ஏ பெற்றேன். தேசிய மொழியில் மட்டும் பி நிலையை அடைந்ததால் அந்தப் பாடத்தின் மீதான ஆர்வம்
குறைந்தது. இடைநிலைப்பள்ளியில் தேசிய மொழி பாடத்திட்டம் மேலும் கடுமையாக இருக்கும்;
இந்த மொழியில் மட்டும் தேர்ச்சி அடையவே முடியாது என்ற பதிவு என் மனதில் பதிவாகிவிட்டது.
யோக சக்தி பயிற்சியை பெற்ற பின்னர், டத்தோஶ்ரீ குருஜி வழங்கிய படிக்கும் முறை பயிற்சியைத்
தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன். இதன் பலனாக கடந்த பிடி3 தேர்வில் 8ஏ, 1பி பெற்றேன்.
டத்தோஶ்ரீ குருஜியின் அருளால் தேசிய மொழி பாடத்தில் ஏ பெற்றதோடு மட்டுமில்லாமல் அந்த
பள்ளியிலேயே அவ்வாண்டிற்கான தேசிய மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவியாகத் திகழ்ந்தேன்
என்று பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த டிவ்யா கோஷிகா இந்திரன் மகிழ்ச்சியுடன் கூறினார்.
- சுகுனேஸ்வரன் புஷ்பநாதன்
படிக்கும் முறை பயிற்சியை பயன்படுத்தி கடந்த எஸ்பிஎம் தேர்வில்
அனைத்துப் பாடங்களிலும் 11ஏ பெற்று சாதனைப் படைத்துள்ளேன். இப்போது மெட்ரிகுலேஷன் உயர்
கல்வியைப் பயில்கிறேன். இந்த முதல் தவணைக்காக முடிவில் அனைத்துப் பாடங்களில் சிறப்பு
தேர்ச்சி பெற்றுள்ளேன். என்னுடைய இந்த வெற்றி சக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக அமைய
வேண்டும் என்று இந்தக் கல்வி கருத்தரங்கில் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான
வாய்ப்பு கிடைத்தது. படிக்கும் முறை பயிற்சியை தொடர்ச்சியாகச் பயன்படுத்தி வருகிறேன்.
இந்தப் பயிற்சியை பயன்படுத்துவதால் ஒவ்வொரு விஷயமும் ஆழமாக இருக்கிறது. தேர்வு நேரங்கில்
இப்பயிற்சி மிகவும் உறுதுணையாக அமைகிறது. இந்தப் பயிற்சியை மேற்கொண்டு டத்தோஶ்ரீ குருஜியின்
அருளால் தொடர்ந்து கல்வியில் சாதனைப் படைப்பேன் என்ற நம்பிக்கை மலர்ந்துள்ளது என்று
காஜாங்கைச் சேர்ந்த சுகுனேஸ்வரன் புஷ்பநாதன் தெரிவித்தார்.
- பிரவினா ஆனந்தன்
எஸ்பிஎம் தேர்வுக்கு பதிலளிக்கும் யுக்திகளையும் படிக்கும் முறை
பயிற்சியை முழுமையாக பயன்படுத்துவதையும் இந்தக் கல்வி கருத்தரங்கின் வாயிலாக அறிந்து
கொண்டேன். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் அணுகுமுறை மிகவும் பிடித்துள்ளது.
பிரத்தியேக வகுப்பு பயிலாமலேயே படிக்கும் முறை பயிற்சியை கையாண்டு கடந்த பிடி3 தேர்வில்
8ஏ பெற்றிருப்பது மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன். சவாலாக இருந்த பாடத்திட்டங்களை
எல்லாம் இந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி சாதனையாக மாற்றினேன் என்று மாணவி பிரவினா ஆனந்தன்
கூறினார்.
No comments:
Post a Comment