Tuesday 6 March 2018

கேஎல்சிசி எதிரே இருந்த மரம் சாய்ந்தது; ஆடவர் காயம்


கோலாலம்பூர்-
நாட்டின் புகழ்மிக்க இரட்டை கோபுரம் (கே.எல்.சி.சி.) கட்டத்திற்கு எதிர்புறம் இருந்த மரம் வேரோடு சாய்ந்ததில்  தம்பதியர்  காயமுற்றார். சாலையின் நடுவே விழுந்த அந்த மரத்தினால் எப்போதும் பரபரப்பாக இருக்கும்  ஜாலான் அம்பாங்கிலிருந்து கேஎல்சிசி செல்லும் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இன்று காலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தினால் வேலைக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.  மேலும் மரம் விழுந்து காயமடைந்த தம்பதியினருக்கு மருத்துவ உதவி பிரிவினர் சிகிச்சை வழங்கினர்.

சாலையில் மரம் விழுந்து  விட்டதை கோலாலம்பூர் மாநகர் மன்றம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

No comments:

Post a Comment