Sunday 11 March 2018

மாணவர்கள் 'மாற்றத்திற்கானவர்களாக' இருக்கக்கூடாது; 'உருமாற்றத்திற்கு' உரியவர்களாக திகழ வேண்டும்- வீ.பொன்ராஜ்

ரா.தங்கமணி
ஈப்போ-
பேராக் இந்தியர் வர்த்தக சபை ஏற்பாட்டில் நடைபெற்ற 'தலைமைத்துவம், நாட்டுப்பற்று, வர்த்தகம்' இலவச பயிற்சி பட்டறை  "இன்றைய மாணவர்கள் மாற்றத்திற்கானவர்களாக இருக்கக்கூடாது; உருமாற்றத்திற்கு உரியவர்களாக திகழ வேண்டும்" என்ற எழுச்சியுரையுடன் தொடங்கியது.

இந்தியாவின் முன்னாள் அதிபரும் அணு விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் வீ.பொன்ராஜ் நிகழ்த்திய எழுச்சியுரை மாணவர்களின் தன்னம்பிக்கையை தூண்டுவதாக அமைந்திருந்தது.

மாணவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முதலில் தங்களுக்குள் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும். அந்த 'தன்னம்பிக்கை'தான் மாணவர்கள் தங்களின் வாழ்க்கையை சீராக அமைத்துக்
கொள்வதற்கான முதல்படியாகும்.

மாணவர்களிடையே சுய ஒழுக்கம், கட்டொழுங்கு, நேரம் தவறாமை, சிந்தனையாற்றல், பகுத்தாய்வு போன்றவற்றை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடையேயான 'மாற்றம்'  அவர்களை வாழ்வாதாரத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும்.

கால சூழலுக்கு ஏற்ற மாற்றத்திற்கு மாணவர்கள் ஆட்படக்கூடாது. உங்களிடையேயான மாற்றம் 'உருமாற்றம்' கொண்டதாக திகழ்ந்திட வேண்டும். அப்போதுதான் உங்களால் வாழ்வில் வெற்றியாளராக திகழ முடியும் என  எழுச்சியுரை நிகழ்த்தினார் அவர்.

இந்நிகழ்வில்  செனட்டர்  டத்தோ டி.மோகன், பிஐசிசி தலைவர் ஹாஜி சுல்தான், முன்னாள் தலைவர் கேசவன், நஸ்ரின், தொழிலதிபர் யோகேந்திரபாலன், நடிகர் சண்முகராஜா உட்பட தன்முனைப்பு பேச்சாளர்களும் பிரமுகர்களும் 150 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment