Wednesday 7 March 2018

கேமரன் மலையில் ம இகாவே போட்டியிடும்- டத்தோஶ்ரீ சுப்பிரமணியம்


தானா ராத்தா-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் ம இகாவே போட்டியிடும் எனவும் அங்கு போட்டியிடக்கூடிய வேட்பாளர் பட்டியல் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இது ம இகாவின் தொகுதியாக தற்காக்கப்படும் நிலையில் இங்கு  மஇகா வேட்பாளரே களமிறக்கப்படுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

2004 முதல் இங்கு மஇகா சார்பில் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணியும், 2013இல் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலும் போட்டியிட்டுள்ள நிலையில் வரும் பொதுத் தேர்தலிலும்  மஇகாவே போட்டியிடும் என கூறிய டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், இங்கு களமிறங்கும் வேட்பாளரின் வெற்றிக்கு  தேசிய முன்னணி பங்காளி கட்சிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தானா ராத்தாவில் தேசிய முன்னனி சேவை மையத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment