Monday 5 March 2018

எங்களை புறக்கணிக்காதீர்; மீறினால் நாங்களும் புறக்கணிப்போம் - டத்தோஶ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
தேசிய முன்னணியின் வெற்றிக்காக களமிறங்கி ஆதரவு திரட்டும் எங்களை புறக்கணிக்காதீர்கள். எங்களை புறக்கணித்தால் நாங்களும் உங்களை புறக்கணிப்போம் என மலேசிய  மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் வெற்றிக்காக மலேசிய மக்கள் சக்தி கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபவர்.

ஆனால் எங்களை புறக்கணிக்கும் நடவடிக்கையில் தேமுவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினர் மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்துகிறேன்.

எங்களிடம் கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக்கட்சியை புறக்கணிக்க வேண்டாம்.

எங்களை புறக்கணிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை புறக்கணிக்க நாங்களும் தயங்க மாட்டோம் என கூறிய டத்தோ தனேந்திரன், தேசியத் தலைவர் எனும் முறையில் எனது விரலின் அசைவில் 153,000 உறுப்பினர்களின்  முடிவு அமைந்துள்ளது என இங்கு நடைபெற்ற ம.ம.ச. கட்சியின்  உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

ம.ம.ச.கட்சி சார்பில் நாங்கள் யாரும் போட்டியிடுவதில்லை. ஆனால் உங்களின் (பங்காளி கட்சி) வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றும் எங்களை புறக்கணிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இந்த மக்கள் சந்திப்பில் லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் ம.ம.ச.கட்சி தலைவர் தாஸ் அந்தோணிசாமி, ம.ம.ச.கட்சி பொதுச் செயலாளர் சுதாகர், பொருளாளர் எஸ்.கே.ராவ், சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து, தொழிலதிபர் யோகேந்திர பாலன், சிலாங்கூர் மாநில ம.ம.ச.கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment