Friday 16 March 2018

'இந்திய சமுதாயத்திற்காக எதையுமே செய்யவில்லையா?' - மஇகாவை சாடினார் துன் மகாதீர்


கோலாலம்பூர்-
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இந்திய சமுதாயத்திற்காக எதையுமே செய்யவில்லை என உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வரும் மஇகாவை வன்மையாக கடிந்து கொண்டார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது.

தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு கட்சி தலைமை வகித்தது. அவ்வகையில் தாம் அம்னோவின் தலைவராக இருந்த வேளையில் மஇகாவின்  தலைவராக துன் ச.சாமிவேலு  திகழ்ந்தார்.

இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் மிகப் பெரிய கட்சியாக திகழ்ந்த மஇகாவே இந்திய சமுதாயத்தின் குரலாக அரசாங்கத்தின் ஒலித்தது.  இந்திய சமுதாயத்திற்கு எதை செய்தாலும் அதை மஇகாவிடம் கேட்டே செய்தோம் என 22 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்திய துன் மகாதீர் கூறினார்.

என்னுடைய தலைமைத்துவத்தின்போது இந்திய சமுதாயத்திற்கு எதையுமே செய்யவில்லை என மஇகா தலைவர்கள் சிலர் குறை கூறி வருகின்றனர். ஆனால் அவர்களால் அதனை உறுதி செய்ய முடியாது.

முன்பு மஇகா கூட்டங்களில் என்னை புகழ்ந்து பேசிய  மஇகாவினர் தற்போது என் மீது புழுதி வாரி தூற்றுகின்றனர் என ஹிண்ட்ராஃப் ஏற்பாட்டில் கோலாலம்பூர் சீன அசெம்பிளி ம ண்டபத்தில் நடைபெற்ற  கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பக்காத்தான் ஹராப்பானின் அவைத் தலைவருமான துன் மகாதீர் வன்மையாக சாடினார்.

No comments:

Post a Comment