ஜோர்ஜ்டவுன் -
கைப்பேசி திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி வசந்தபிரியாவின் மரணம் தொடர்பான நீதி விசாரணை இம்மாதம் 30ஆம் தேதி தொடங்கும் என பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ அ.தெய்வீகன் தெரிவித்தார்.
மரண விசாரணை நீதிமன்றத்தால் நடத்தப்படும் எனவும் இது தொடர்பில் 30 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் வசந்தப்பிரியாவின் மாணம் குறித்து புலன் விசாரணை மேற்கொள்ள அட்டர்னி ஜெர்னல் அனுமதி அளித்து விட்டார்.
இந்த புலன் விசாரணை, நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றி ஆராயுமே தவிர இதன்வழி யார் மீதும் குற்றச்சாட்ட முடியாது என்றார் அவர்.
இங்குள்ள இடைநிலைப்பள்ளியில் 2ஆம் படிவம் பயின்று வந்த மாணவி வசந்தபிரியா, ஆசிரியரின் கைப்பேசி களவு போனது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த விசாரணையால் மன உளைச்சலுக்கு ஆளான வசந்தபிரியா, கடந்த ஜனவரி 24ஆம் தேதி தனது வீட்டின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கிய போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.
No comments:
Post a Comment