Monday 1 January 2018

'நேரடி மோதலையே மக்கள் விரும்புகின்றனர்; 4 , 5 முனை போட்டி தேமுவுக்கு சாதகமாகும்' - டாக்டர் ஜெயகுமார்


பெட்டாலிங் ஜெயா-
சுங்கை சிப்புட் மக்கள் நேரடி மோதலையே விரும்புகின்றனர். மாறாக 4 அல்லது 5 முனை போட்டிகளை விரும்பவில்லை என நடப்பு நாடாளும்ன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் கூறினார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தேசிய முன்னணியும் நம்பிக்கை கூட்டணியும் போட்டியிடும் சூழலில் பாஸ் கட்சியும் தனது வேட்பாளரை களமிறக்கவுளது என கூறப்படுகிறது.

நேரடி மோதலை தவிர்த்து பல முனை போட்டிகள் இங்கு உருவானால் தேசிய முன்னணிக்கே அது வெற்றியாக அமையும். தேமுவை மக்கள் விரும்பவில்லை என்றாலும் ஒரு கட்டாயத்தின் பேரில் இந்த வெற்றி தக்க வைக்கப்படும்.

கடந்த  13ஆவது பொதுத் தேர்தலில் மலாய் வாக்காளர்களின் 3இல் 1 பெரும்பான்மை வாக்குகளை பெற பாஸ் கட்சி பெரிதும் உதவியது.  பாஸ் கட்சி பல ஆண்டுகளாக சுங்கை சிப்புட் வட்டாரத்தில் செயல்படுவதோடு அடிமட்ட நிலையில் வலுவான ஆதரவை பெற்ற கட்சியாகவும் அது திகழ்கிறது. ஆனால் தற்போது அது சுயேட்சை வேட்பாளரை களமிறக்கும் என அறிவித்துள்ளதோடு கட்சி ஆதரவாளர்கள் பிறருக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது என்றார் அவர்.

கடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணியை எதிர்த்து போட்டியிட்ட டாக்டர் ஜெயகுமார் 2,793 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment