Friday 5 May 2017

மலாய்க்காரர் அல்லாதோர் பிரதமரா? பிபிபிஎம் ஏற்காது-துன் மகாதீர்

மலாய்க்காரர் அல்லாதோர் பிரதமரா?

பிபிபிஎம் ஏற்காது-துன் மகாதீர்

துன் மகாதீர்

கோலாலம்பூர்-
மலாய்க்காரர் அல்லாதோரை பிரதமர் பதவிக்கு வருவதை பிபிபிஎம் (பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா) ஏற்காது, அதற்கு ஆதரவளிக்காது என அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

222 கூட்டாட்சி இடங்களில் 52 இடங்கள் மட்டுமே சீனர்களின் பெரும்பான்மை தொகுதிகள் ஆகும்.

முஸ்லிம் தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கும் பல இன கட்சிகள் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சில தொகுதிகளை வழங்கலாம்.

ஆனால் முஸ்லிம் தலைமைத்துவத்தை கொண்டுள்ள மூன்று பெரும்பான்மை கட்சிகளில் முஸ்லிம் வேட்பாளர்களே களமிறக்கப்படுவர். பிபிபிஎம் ஒரு முஸ்லிம் கட்சி, ஆதலால் முஸ்லிம் அல்லாதோர் பிரதமராக வருவதற்கு ஆதரவளிக்க முடியாது. எதிர்க்கடி கூட்டணியில் உள்ள டிஏபி பினாங்கை தவிர வேறு எங்கும் ஆதிக்கம் செலுத்த முடியாது என துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

டிஏபி ஆதிக்கம் செலுத்தும் ஓர் எதிர்க்கட்சியாக பக்காத்தான் ஹராப்பான் திகழ்கிறது எனவும் அது ஒரு பேரினவாத கட்சி எனவும் அம்னோ தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


No comments:

Post a Comment