Wednesday 10 May 2017

ஜுன் 3 - 26 வரை 'மெகா மை டஃப்தார்'

ஜுன் 3 - 26 வரை

'மெகா மை டஃப்தார்'



ந்நாட்டிலுள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம், குடியுரிமை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 'மெகா மை டஃப்தார்நிகழ்வு நாடு தழுவிய நிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அரசாங்கம் அமல்படுத்திய 'மை டஃப்தார்' திட்டத்தின் தொடர்ச்சியாக அமையவுள்ள இந்த 'மெகா மை டஃப்தார்' ஜூன் 3ஆம் தேதி 26ஆம் தேதி வரை 23 இடங்களில் இந்நிகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

'மை டஃப்தார்' நிகழ்வின் மூலம் அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம், குடியுரிமை இல்லாத 12,000 பேரின்  விண்ணப்பங்களை அரசாங்கம் பெற்றுள்ளது.

அதில் 7,000 பேரின் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் எஞ்சிய 4,000 பேரின் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலித்து கொண்டிருக்கிறது.]

இந்த நடவடிக்கையை அரசியல் கட்சிகள், பொது இயக்கங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு மேற்கொண்டிருக்கிறோம்.

நாட்டில் அடையாள ஆவணங்கள் இல்லாமல் 300,00 பேர் இருப்பதாக எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கின்றனர். இதனை பெரிய விவகாரமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த பொய் பிரச்சாரத்தை எதிர்க்கட்சியினர் மேற்கொள்கின்றனர்

No comments:

Post a Comment