Monday 8 May 2017

எஸ்எம்சிக்கு வெ.30 லட்சம் மானியம்!


கோலாலம்பூர்-
 முருகன் நிலையம் ஆற்றி வரும் கல்விப் பணியை மேலும் வலுப்படுத்துவதற்கு ஏதுவாக 30 லட்சம் வெள்ளி மானியம் வழங்குவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி அறிவித்தார்.

கல்வி சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, பல்வேறு கல்வி போதனைகளை வழங்கி அவர்களை சிறந்த பட்டதாரி மாணவர்களாக உருவாக்குவதில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் (எஸ்எம்சி) பங்கு அளப்பரியது ஆகும்.

இன்னும் 30 ஆண்டுகளில்  எஸ்எம்சி நிலையத்தை இளைஞர்கள் வழிநடத்துவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதில் புத்தாக்கமும் உருமாற்றமும் நிரம்பி இருக்கும்.

ஆயிரக்கணக்கான மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கியுள்ள எஸ்எம்சி, அவர்களுக்கான ஒரு தளத்தை உருவாக்கி, அவர்களின் திறமைகளை மேம்படுத்தி, சிந்தனையாற்றலை தூண்டிவிட்டு, அவர்களை நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும் தலைமைத்துவ மாண்பு கொண்டவர்களாகவும் எஸ்எம்சி உருவாக்கியுள்ளது.

சிறந்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் பங்களிப்பு இருப்பதால் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.

அவ்வகையில் 2020 இலக்கையும் தேசிய உருமாற்றம் 2050 (திஎன்50) இலக்கையும் அடைவதற்கு எஸ்எம்சி தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ ஸாயிட்  ஹமிடி  குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment