ராஜமௌலியின் அடுத்த ஹீரோ யார்?
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் பெரும் வெற்றியை ஏற்படுத்தி
இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. அவர் அடுத்து இயக்கும் படத்தை பற்றி
இப்போதே பரபரப்பு எழுந்துவிட்டது.
ஆனால் சில மாத ஓய்விற்கு பிறகு தான் அடுத்த படத்தை இவர் இயக்குவாராம். ஆனால்
அதற்குள் அடுத்த படத்தில் நடிப்பதற்கு ஹீரோக்களுக்கிடையில் கடும் போட்டி
நிலவியுள்ளதாம்.
இதற்கு முன் அவருடன் பணியாற்றிய, பணிபுரியாத ஹீரோக்கள் அடுத்த படத்தில் நாங்கள் நடிக்கிறோம் என தூது அனுப்பி வருகிறார்களாம். அடுத்த படத்தின் கதையை உருவாக்கிய பின்புதான் யார் ஹீரோ என்பதை
ராஜமௌலி முடிவு செய்வாராம்.
ராஜமௌலியின் அடுத்த படத்தில் யார் ஹீரோ என்பதில்
தெலுங்கு நடிகர்களுக்குள் இப்போதே கடும் போட்டி ஆரம்பமாகிவிட்டது.
No comments:
Post a Comment