Monday 22 May 2017

தேமு வேட்பாளராக யோகேந்திர பாலனே வேண்டும்! மக்கள் கோரிக்கை


சுங்கை சிப்புட்-
தினந்தோறும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் யார் வேட்பாளராக களமிறக்கப்படுவார்? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

மஇகாவின் இரு தேசியத் தலைவர்கள் பதவி வகித்த இத்தொகுதியில் அந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களே மீண்டும் களமிறங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் வேளையில் மண்ணின் மைந்தருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது.

துளசி

இந்நிலையில் இங்கு பிறந்து தலைநகரில் வர்த்தகம் மேற்கொண்டு வரும் தொழிலதிபர் யோகேந்திர பாலனே இம்முறை இத்தொகுதியின் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சுங்கை குருடா மக்கள்  தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுங்கை குருடா தோட்டத்தில் பிறந்து வளர்ந்த யோகேந்திர பாலன் தலைநகரில் சொந்த தொழில் மேற்கொண்டு வருகின்றார். ஆனாலும் இந்த தோட்டத்து மக்களை மறக்காமல் பல்வேறு உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார் என தோட்ட குடியிருப்புவாசிகளான பி.அந்தோணிசாமி, ஆர்.சுப்பிரமணியம், பி.ராமன், கே.மனோகரன், எஸ்.காளியப்பா, எஸ்.தனகராசு, திருமதி துளசி ஆகியோர் தெரிவித்தனர்.

பி.ராமன்

சுங்கை குருடா மக்களுக்கு மட்டுமின்றி சுங்கை சிப்புட் மக்களுக்கும் பல்வேறு வகையில் உதவிகளை புரிந்து வரும் யோகேந்திர பாலன் தேசிய முன்னணி வேட்பாளராக இங்கு களமிறக்க வேண்டும்.

ஆர்.சுப்பிரமணியம்

அவ்வாறு இங்கு யோகேந்திர பாலன் தேமு வேட்பாளராக களமிறக்கப்பட்டால் இன்னும் கூடுதலான சேவைகளை அவரால் புரிய முடியும். இது இங்குள்ள மக்களுக்கு கூடுதல் நன்மைகளை விளைவிக்கும்.



மண்ணின் மைந்தருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால்  அவரின் வெற்றியை நிச்சயம் உறுதி செய்ய முடியும் எனவும் எதிர்க்கட்சி வசமுள்ள இத்தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றுவதற்கு அடித்தளமாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment