Wednesday 10 May 2017

நீங்கள் சிறந்த பாடகரா? இதோ வருகிறது 'ஐ-சிங் மலேசியா 2017'

நீங்கள் சிறந்த பாடகரா?
இதோ வருகிறது '-சிங் மலேசியா 2017' 

கோலாலம்பூர்-
தி ரிதம்ஸ் மைன் (சிங்கப்பூர்), ஆரஞ்சு பாக்ஸ் ஸ்டூடியோ மலேசியா ஆகியவற்றின் ஏற்பாட்டில்  'ஐ சிங் மலேசியா 2017'  எனும் அனைத்துலக ரீதியிலான பாடல் திறன் போட்டி நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர், இந்தியா, நேப்பாள், மியான்மார் உட்பட 30 நாடுகள் பங்கேற்கும் இந்த  போட்டியில் மலேசியாவும் பங்கேற்கிறது என அதன் ஏற்பட்டாளர்கள் மைக்கல் சாமி, ஜெய்  ஆகியோர் தெரிவித்தனர்.

தனி பாடல், டூயட் பாடல் என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ள இந்த போட்டியில் 16 வயது முதல் 65 வயது வரையிலான அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம்.

இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் எந்த மொழியிலும் (தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம்பாடலை பாடலாம். அதற்கான நடுவர்கள் தயார் நிலையில் இருப்பர்.


இதில் பங்கேற்கபதற்கு நுழைவு கட்டணம் விதிககப்படுகிறது. அதற்கேற்ப மாணவர்களுக்கு  20 வெள்ளியும், இணையதளத்தில் பதிவு செய்பவருக்கு 30 வெள்ளியும், குரல் தேர்வவின்போது பதிவு செய்வோருக்கு 40 வெள்ளியும் கட்டணம் விதிக்கப்படுகிறது என மைக்கல் சாமி கூறினார்.

குரல் வளம், இசை, தாளம், மேடை படைப்பு, ரசிகர்களின் ஈர்ப்பு, திறன் வெளிப்பாடு ஆகிய கூறுகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் வெற்றி பெறுபவருக்கு  தனிப்பாடல் பிரிவு வெ.5,000.00, டூயட் பிரிவில் வெ.6,000.00 வழங்கப்படும்.

தனிப்பாடலில் ஒருவரும், டூயட் பாடலில் இருவரும் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படும் வேளையில் மியன்மார், யங்கூனில் நடைபெறும் அனைத்துலகப் போட்டியில் பங்கேற்பர். 29 செப்டம்பர் முதல் 1 அக்டோபர் வரை நடைபெறும் அனைத்துலகப் போட்டியில் வெற்றியாளராக வாகை சூடுபவருக்கு அமெரிக்கா டாலர் 10,000 வெகுமதியாக வழங்கப்படும்.

இந்த போட்டிக்கான குரல் தேர்வு பினாங்கு, ஜோகூர்பாரு, கோலாலம்பூர், ஈப்போ ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

* பினாங்கு - 4.6.2017 (ஞாயிற்றுக்கிழமை), காலை 9.00 - 5.00 மணி வரை இடம்: YMCA, 211, Jalan Macalister, George Town, Pinang.

* ஜோகூர்பாரு - 10.6.2017 (சனிக்கிழமை), காலை 9.00- 5.00 மணி வரை இடம்: Tropical Inn, 15, Jalan Gereja, Bandar Johor Bahru, Johor.

* கோலாலம்பூர் - 18.6.2017 (ஞாயிற்றுக்கிழமை), காலை 9.00 - 5.00 மணி வரை, இடம்: Odyssey Vocal and Music Training, 4, Wisma Ajenzi Riaz, Jalan Tun Sambanthan, Brickfield, Kuala Lumpur.

* ஈப்போ- 1.7.2017 (சனிக்கிழமைகாலை 9.00- 5.00 மணி வரை , இடம்:  MU Hotel, 18, Jalan Chung On Siew, Taman Jubilee, Ipoh, Perak.

தனக்குள்ளே திறமைகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையவுள்ள 'ஐ சிங் மலேசியா' போட்டி அமைந்துள்ளது. உலகளாவிய நிலையில் தனது திறமையை வெளிபடுத்துவதற்கு இப்போட்டி ஒரு களமாகவும் திகழ்கிறது என ஜெய் குறிப்பிட்டார்.

மேல் விவரங்களுக்கு இணைய பதிவுக்கும் I-Sing Malaysia https://www.facebook.com/ISingMalaysia/  எனும் முகநூல் பக்கத்தை நாடலாம் அல்லது இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்பினால் http://i-singworld.com/registration-2017/ என்ற அக்ப்பக்கத்தின் வாயிலாக பதிவு செய்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment