7 நாடாளுமன்றம், 14 சட்டமன்றத் தொகுதிகள்மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!
சுங்கைப்பட்டாணி
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் 7 நாடாளுமன்றம், 14 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என மஇகா இலக்கு கொண்டிருப்பதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஜோகூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, மலாக்கா, பகாங் உட்பட கெடாவில் உள்ள இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
14ஆவது பொதுத் தேர்தலில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகளி;ல் வெற்றி பெறுவதற்கான சூழல் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் முடிந்தால் இந்த எண்ணிக்கையை 7ஆக அதிகரிக்க முடியும் எனவும் எம்ய்ட்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற மஇகா தொகுதித் தலைவர்களுக்கும் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கும் நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையை நிறைவு செய்து வைத்தபோது டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.
அதே வேளையில் கடந்த பொதுத் தேர்தலின்போது 18 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிட்டது. வரும் பொதுத் தேர்தலில் 19 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் மஇகா 13, 14 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்டது.
No comments:
Post a Comment