Friday 5 May 2017

நம்பிக்கை கூட்டணிக்கு ‘பொது சின்னம்’ சமூக ஊடக பயனர்கள் முன்மொழியலாம்

நம்பிக்கை கூட்டணிக்கு 

பொது சின்னம்

சமூக ஊடக பயனர்கள் முன்மொழியலாம்


பெட்டாலிங் ஜெயா-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்கு ஏதுவாக நம்பிக்கைக் கூட்டணிக்கு பொதுவான சின்னத்தை முன்மொழிய சமூக ஊடக பயனீட்டாளர்களுக்கு நம்பிக்கை கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

நம்பிக்கைக் கூட்டணியில் அங்கத்துவம் பெற்றுள்ள கட்சிகள் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஏதுவாக புதிய சின்னம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

புதிய சின்னம் தொடர்பில் மக்களின் கருத்துகளை வரவேற்கும் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் ஆக்கப்பூர்வமான வடிவமைப்புகளை வரவேற்பதாக கூறுகின்றனர்.

இந்த சின்னம் இரு வண்ணங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதோடு எளிதில் மக்களை சென்றடைவதாகவும் நம்பிக்கை, ஜனநாயகம், ஒற்றுமை, நீதி ஆகிய கோட்பாடுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி மூன்று புதிய சின்னங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு சவால் விடுக்கும் வகையில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் ஒரே சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஏதுவாக மூன்று சின்னங்களை வெளியிட்டனர்.

ஆனால் அந்த மூன்று சின்னங்களும் பெரும்பாலான மக்களை கவர்ந்திழுக்கவில்லை. எதிர்மறையான கருத்துகளை அவர்கள் வெளிபடுத்தினர்.

புதிய சின்னங்களை வடிவமைப்போர்  அதனை வரும் மே 9ஆம் தேதி காலை 10.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வடிவமைப்பாளர் தனது பெயர், அடையாள அட்டை எண், தொலைபேசி எண் ஆகிவற்றை வழங்க வேண்டும்.

logo@pakatanharapan.my  எனும் அகப்பத்தின் வாயிலாக வடிவமைப்பாளர்கள் தங்களது வடிவமைப்பை அனுப்பி வைக்கலாம்.

No comments:

Post a Comment