தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜூனின் மகன் நாக சைதன்யாவும்
நடிகை சமந்தாவும் காதலித்து வந்ததைத் தொடர்ந்து, இவர்களின் திருமணம் அக்டோபர் 6ஆம் தேதி
ஹைதராபாத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களின் திருமணம் கோவாவில் நடைபெறும் என்று வெளியான செய்தியை
மறுத்து, ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக நாக
சைதன்யா உறுதி செய்துள்ளார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் ஜனவரி 29ஆம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவ்வாண்டுக்குள் இவர்களின் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியானது. அதுபோல் வரும் அக்டோபர் மாதம் நாக சைதன்யாவை கரம் பிடிக்கிறார்
நடிகை சம்ந்தா.
No comments:
Post a Comment