Friday 5 May 2017

‘இந்து சமயத்தை இழிவுப்படுத்தாதே’ பெர்லிஸ் முப்திக்கு எதிராக போலீஸ் புகார்

இந்து சமயத்தை இழிவுப்படுத்தாதே
பெர்லிஸ் முப்திக்கு எதிராக போலீஸ் புகார்

கோலாலம்பூர்-
இந்து சமயத்தை இழிவுபடுத்தி பேசிய பெர்லிஸ் முப்தி டத்தோ டாக்டர் அஸ்ரிக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் புகார் செய்யப்படும் என பொது இயக்கங்கள் வலியுறுத்தின.
டாக்டர் அஸ்ரி இந்து சமயத்தையும் தெய்வங்களையும் இழிவுபடுத்தி பேசும் காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியானது. அதை தொடர்ந்து அவருக்கெ எதிரான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் பிற மதங்களை இழிவுப்படுத்தும் நடவடிக்கையை யாரும் மேற்கொள்ளக்கூடாது எனும் நோக்கத்தில் நாடு தழுவிய நிலையில் போலீஸ் புகார் செய்யபடுவதாக ராப்பாட் மெஸ்ரா இயக்கத்தின் தலைவர் கண்ணன் ராமசாமி  கூறினார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
1: வெள்ளிக்கிழமை (5.5.2017) கோலாலம்பூர், கோர்ட்டு மலை பிள்ளையார் கோயிலில் அகல் விளக்கேற்றி பிரார்த்தனை.
2. சனிக்கிழமை (6.5.2017) செந்தூல் காவல் நிலையத்தில் அஸ்ரிக்கு எதிராக போலீஸ் புகார் செய்தல். பிற மாநிலங்களிலும் இதனை முன்னெடுத்தல்.
3. நாட்டின் நல்லிணக்கத்திற்கு மருட்டல் ஏற்படுத்தும் ஸாகீர் நாய்க், அஸ்ரி ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாமன்னரிடம் மகஜர் சமர்ப்பிக்கப்படும்.
ஹிண்ட்ராஃப் தலைவர் பி.வேதமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு 13 இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

No comments:

Post a Comment