Wednesday 10 May 2017

யோக சக்தி துணையுடன் கல்வியில் முன்னேற்றம் மாணவர்கள் நெகிழ்ச்சி

யோக சக்தி துணையுடன் கல்வியில் முன்னேற்றம்

மாணவர்கள் நெகிழ்ச்சி

ஆர்பிடியின் கல்வி கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களின் அனுபவத்தையும் பலன்களையும் பாரதம் இணைய ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

  சுகுனேஷ்வரன் புஷ்பநாதன்
சுகுனேஷ்வரன் புஷ்பநாதன் 
ஒவ்வோர் ஆண்டும் ஆர்பிடி இயக்கம் கல்வி கருத்தரங்கை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டின் கல்வி பயிலரங்கில் கலந்து கொண்டு எஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்றேன். யோக சக்தியை துணைக்கொண்டு கல்வியில் சிறப்பு தேர்ச்சியை பெறுவதையும் அதற்கான வழிமுறைகளையும் இக்கருத்தரங்கில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் யோக சக்தியை பயன்படுத்தி நன்மை அடைந்த மாணவர்கள் நேரடியாக அவர்களின் வெற்றிகள் எங்களிடம் கூறும்போது தன்முனைப்பாகவும் தூண்டுதலாகவும் அமைந்தது.



குணாதன் ஜீவகுமார்
குணாதன் ஜீவகுமார்
கல்வி முறை பயிற்சியை பயன்படுத்தி படிக்கும்போது எளிதாக ஆழ்மனதில் பதிந்தது. அனைத்துப் பாடங்களிலும் சிறப்பு தேர்ச்சி பெற  வேண்டும் என்ற பதிவை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தேன். பிடி3, எஸ்பிஎம் தேர்வில் குறைவான தேர்வு புள்ளிகளை மட்டுமே பெற்றேன். ஆனால், எஸ்டிபிஎம் தேர்வில் யோக சக்தியை முழுமையாகவும் நம்பிக்கையுடனும் பயன்படுத்தி அனைத்து பாடங்களிலும் ஏ பெற்றேன். சுங்கை பட்டாணி இடைநிலைப்பள்ளி வரலாற்றிலேயே எஸ்டிபிஎம் தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஏ (5ஏ) பெற்றவர்கள் கிடையாது. குருவின் அருளால் அந்த சாதனையை நான் படைத்துள்ளேன்.



 கோமகள் நவநீதன்
கோமகள் நவநீதன் 
வரலாறு பாடத்திட்டம் படிப்பதற்கு மிகச் சிரமமாக இருக்கும். யோக சக்தியை துணைக்கொண்டு பயிலும்போதுதான் ஒவ்வொன்றும் எளிதாக ஆழ்மனதில் பதிவதை உணர்ந்தேன். கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெறுவதற்கு இந்த கல்வி கருத்தரங்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.




ராஹுல் மனாவாரன்
ராஹுல் மனாவாரன்
ஆர்பிடி இயக்கம் ஏற்பாடு செய்யும் கல்வி கருத்தரங்கு நிச்சயமாக நன்மையே பயக்கும் என்று உணர்ந்து மிக மகிழ்ச்சியுடன் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டேன். நான் செய்து வரும் கல்வி முறை பயிற்சி தவறாக செய்து வருவதை இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகுதான் தெரிந்து கொண்டேன். படிவம் 1 படிக்கும் பொழுது விளையாட்டுதனமாக இருந்த நான் யோக சக்தி பயிற்சியை பெற்ற பிறகுதான் நன்கு படிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. டத்தோஸ்ரீ குருஜி வழங்கிய யோக சக்தியை பயன்படுத்திய பிறகுதான் கல்வியில் மிகப் பெரிய மாற்றத்தை உணர்ந்தேன். ஏ எடுக்காத மாணவனாகிய என்னை 5 ஏ எடுக்க வைத்தது யோக சக்தி.


   மதுரேஸ்வரன் செல்வராஜா
 
மதுரேஸ்வரன் செல்வராஜா 
10 மாணவர்களை ஒர் ஆசிரியர் வழிநடத்தும் திட்டம் மிகவும் வரவேற்கப்படுகிறதுபாடத்திட்டத்தில் சந்தேகங்கள் ஏதும் எழுந்தால் ஆசிரியரிடம் நேரடியாகவோ அல்லது தொடர்பு கொண்டோ சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்யோக சக்தியை துணைக்கொண்டு படிக்கும் போது ஒவ்வொரு நுணுக்கங்களையும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.




 ஷாலினி கிருஷ்ணமூர்த்தி
ஷாலினி கிருஷ்ணமூர்த்தி
இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகு எனக்குள் தன்னம்பிக்கை பிறந்ததுள்ளதுபுரியாமல் இருந்த சில பாடங்கள் இதன் வாயிலாக தெளிவாக புரிந்ததுவரும் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. 






மஹாயாஷினி ராஜேந்திரன்
மஹாயாஷினி ராஜேந்திரன் 
இந்தக் கல்வி கருத்தரங்கில் கற்றுக் கொண்ட விஷயங்கள் எனக்கு ஒரு தூண்டுதலாக அமைந்ததுவரும் தேர்வில் யோக சக்தியின் துணை கொண்டு சிறப்பான தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.





இந்த கல்வி கருத்தரங்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த டத்தோஸ்ரீ குருஜிக்கும் டத்தின்ஸ்ரீ ஜி-க்கும் இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment