Monday 1 May 2017

குறை கூறுவதே எதிர்க்கட்சியின் வாடிக்கையாவிட்டது

குறை கூறுவதே எதிர்க்கட்சியின் 

வாடிக்கையாவிட்டது!


சுங்கை சிப்புட்

ந்திய சமுதாயத்திற்கான திட்டங்களை முன்னெடுக்கும் போதெல்லாம் அதனை குறை கூறுவதே எதிர்க்கட்சியினரின் வாடிக்கையாகிவிட்டது. இந்த குறைகூறல்களினால் தான் இந்திய சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய பல நல்திட்டங்கள் இன்னும் தாமதம் அடைகின்றன என பேராக் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ .இளங்கோ குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம்  இந்தியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களில் மைல்கல்லாக வியூக வரைவு செயல் திட்டத்தை (புளூபிரிண்ட்) டத்தோஸ்ரீ நஜிப் அண்மையில் அறிமுகம் செய்தார்.

10 ஆண்டுகால வரைவு செயல் திட்டத்தை உள்ளடக்கியுள்ள இந்த புளூபிரிண்ட் திட்டத்தை செயல்படுத்த முனையும்போதே 'இது ஏமாற்று வேலைஇந்திய சமூகத்தை ஏமாற்றக்கூடியது' என எதிர்க்கட்சியினர் குறை கூற தொடங்கிவிட்டனர்.

டத்தோ இளங்கோ


எதிர்க்கட்சி என்பதற்காக தொட்டதற்கெல்லாம் குறை கூற வேண்டாம். இத்தகைய குறை கூறல்களால்தான் இந்திய சமுதாயம் பல்வேறு வாய்ப்புகளை இழந்து தவிக்கிறது என சுங்கை சிப்புட் எஸ்ஐடிஎஃப் அலுவலக திறப்பு விழாவில் உரையாற்றிய டத்தோ இளங்கோ கூறினார்.

No comments:

Post a Comment