Friday, 5 May 2017

டிஎச்ஆர் ராகாவின் ‘கண்டுபிடிச்சா காசு’

 டிஎச்ஆர் ராகாவின்கண்டுபிடிச்சா காசு



டி.எச்.ஆர் ராகா அஜெண்டா சூரியாகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் கண்டு பிடிச்சா காசு போட்டியில் 3 கிராம் தங்கத்தை வெல்லும் அரிய வாய்ப்பு காத்து கொண்டிருக்கின்றது.

மே 5-ஆம் தேதி தொடங்கி மே 7-ஆம் தேதி வரை மிட்வேலி கொன்வேன்ஷன் சென்டரில் நடைபெறும் இப்போட்டியில் 18 வயதிற்கு மேற்பட்ட பதிவு செய்யும் முதல் 10 பேருக்கும் மட்டுமே இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்.

இப்போட்டியில் மொத்தம் மூன்று சுற்றுகள் இடம்பெறும். முதல் சுற்றில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதில் செல்லும் 6 பேர் அடுத்து சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். பிறகு, இரண்டாம் சுற்றில் 3 பேர் நீக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு 3 பேர் மட்டுமே போட்டியிடுவார்கள்.

இந்த இறுதி சுற்றின் போது பெட்டிக்குள் வைக்கப்பட்டிக்கும் பொருளின் பெயரைச் சரியாகச் சொல்லும் வெற்றியாளருக்கு 3 கிராம் தங்கம் வழங்கப்படும்.

டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா, சுரேஷ், அகிலா, ராம், ரேவதி, கவிமாறன், கீதா, ஷாலு, யாசினி மற்றும் ஜெய் இப்போட்டியை ஏற்றி நடத்துவார்கள்.

அதுமட்டுமின்றி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் 7 மணி வரை ஹைப்பர் மாலையில் நிகழ்ச்சியின் வெளி நேரடி ஒலிபரப்பு மிட்வேலியில் இடம்பெறும்.

ஆகவே, மூன்று நாட்களுக்கு நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளைத் தட்டி செல்லுங்கள் நேயர்களை டிஎச்ஆர் ராகா அழைக்கிறது.
மேல் விவரங்களுக்கு raaga.thr.fm  எனும் அகப்பக்கத்தை நாடலாம்.

No comments:

Post a Comment