Saturday 13 May 2017

உதயமானது 'மலேசிய இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டுக் கழகம்'

உதயமானது 

'மலேசிய இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டுக் கழகம்'


கோலாலம்பூர்-
இந்நாட்டிலுள்ள தொழில் முனைவர்களின்  மேம்பாட்டுக்காக அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மலேசிய இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் உதயமாகியுள்ளது.

மைக்கியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் தலைமையில் கூட்டுறவு கழக அதிகாரி முன்னிலையில் இங்குள்ள சிக்னேச்சர்  ஹோட்டலில் நடைபெற்ற இதன் அறிமுகக் கூட்டத்தில் சுமார் 115 பேர் கலந்து கொண்டனர்.



இதில்  டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தலைமையில் 11 வாரிய உறுப்பினர்கள் கூட்டுறவுக் கழக அதிகாரி முன்னிலையில் முன்மொழியப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வர்த்தக ரீதியில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் இந்த கூட்டுறவுக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவுக் கழகத்திற்கு ஆரம்பக் கட்ட ஆதரவை மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் வழங்கி அதனை தொடக்கி வைக்கும் என டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.



வருகையளித்திருந்த வர்த்தகர்களுக்கு கூட்டுறவுக் கழகத்தின் செயல்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டு தற்போது பலர் ஒன்றிணைந்து கைகோர்த்து இத்திட்டத்தில் செயல்பட இணக்கம் காட்டியுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.

எழுத்து: வெற்றி விக்டர். 

No comments:

Post a Comment