Tuesday 3 July 2018

முழு அமைச்சரவை இன்று பதவியேற்பு


கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பேரரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

கடந்த மே 9ஆம் தேதி நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் 13அமைச்சர்கள் பதவியேற்றிருந்த நிலையில் இன்றுக் காலை அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் 13 அமைச்சர்களும் 23 துணை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த புதிய அமைச்சரவையில் டாக்டர் சேவியர் ஜெயகுமார் நீர், நில, இயற்கை வள அமைச்சராகவும் சிவராசா ராசையா கிராமப்புற துணை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment