Saturday 14 July 2018
ஸாகீர் நாய்க் விவகாரம்: காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்க வேண்டாம்- டத்தோஶ்ரீ தனேந்திரன்
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாகீர் நாய்க் விவகாரத்தில் சட்டத் திட்டங்கள், இந்திய அரசு என காரணங்களை அடுக்காமல அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற ஆளும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் முனைய வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின் போது ஸாகீர் நாய்க் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என இப்போது ஆளுங்கட்சியாக இருக்கின்ற (முன்பு எதிர்க்கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் குரல் கொடுத்தனர்.
புதிய அரசாங்கத்தில் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் எம்.குலசேகரன் கூட ஸாகீர் நாய்க் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என குரல் எழுப்பியிருந்தார்.
ஆனால், இப்போது ஆட்சியை பிடித்தவுடன் என குலசேகரனும் தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் சட்டத் திட்டங்கள், இந்திய அரசு தெளிவான விளக்கத்தை வழங்கவில்லை, நிரந்தர குடியுரிமை கொண்டுள்ளார் என காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றனர் ஆகியோர்
சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு இதையேதான் கடந்த தேசிய முன்னணி அரசாங்கம் செய்தது. அப்போது தேமு அரசாங்கம் மீது சராமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள், இன்று இதே சட்டத் திட்டங்களை பற்றி பேசி கொண்டிருப்பதில் என்ன பயன் உள்ளது?
ஸாகீர் நாய்க் இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பது பெரும்பாலான இந்தியர்களின் கோரிக்கையாகும். அதனை ஆளும் அரசு செவிமடுத்து ஸாகீர் நாய்க்கை அவரது தாயகத்திற்கு திரும்ப அனுப்ப வேண்டும் என டத்தோ டத்தோஶ்ரீ தனேந்திரன் வலியுறுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment