கோலாலம்பூர்-
மக்களவை சபாநாயகர் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் சச்சரவு ஏற்படுத்தியபோது அதனை புன்னகைத்தவாறு ரசித்துக் கொண்டிருந்தார் பிரதமர் துன் மகாதீர்.
இன்றுக் காலை மக்களவை கூடியபோது சபாநாயகர் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சியினரான தேசிய முன்னனி, பாஸ் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு அதிருப்தியை வெளிபடுத்தி நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சியினரின் இத்தகைய செயலை எவ்வித சலனமும் இன்றி பிரதமர் துன் மகாதீரும் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸிஸாவும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment