Wednesday 11 July 2018

குகையில் சிக்கிய 8 சிறுவர்கள் மீட்கப்பட்டனர் - தாய்லாந்து அரசு


பேங்காக்-
தாய்லாந்து குகையினுள் சிக்கிக் கொண்ட 12 சிறுவர்களில் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 23ஆம் தேதி தாய்லாந்து பகுதியில் உள்ள தி தம் லு அங் குகைக்குள் கால்பந்து குழுவைச் சேர்ந்த 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் சென்றனர். அப்போது திடீரென பெய்த கனமழையால் இவர்கள் அனைவரும் குகையினுள் சிக்கிக் கொண்ட்னர்.

அதன் பின்னர் இவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. 10 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு இவர்கள் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. மழை பெய்ததால் குகை முழுவதும் பல அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் இவர்களை வெளியில் கொண்டு வர முடியவில்லை,

சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர் மீட்புப் பணிகள் தொடங்கின. கடந்த 8ஆம் தேதி தொடங்கப்பட்ட மீட்பு நடவடிக்கையில் நான்கு சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதனை தொடர்ந்து நேற்றும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

தற்போது 4 சிறுவர்களும் பயிற்சியாளர் மட்டுமே உள்ளே இருப்பதால் இவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இந்த மீட்புப் பணியில், தாய்லாந்து மீட்புப் படையினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment