Saturday 14 July 2018

எம்.ஜி.ஆர் குணத்தை நான் மதிக்கிறேன். என்னால் முடிந்த சேவையே செய்கிறேன் – நீலாய் எம்.ஜி.ஆர். வேலு கருத்து



நீலாய் வட்டாரத்தில் சிறு வயதிலிருந்து கலைத்துறையில் கால் பதித்து பல வருடங்களுக்குப்பிறகு அவருக்கு வந்த யோசனையில் எம்.ஜி.ஆர் போல் வேடமிட்டு நடிப்பது மட்டுமில்லாமல் அவரைப்போல் வசதி குறைந்தவர்களுக்கு உதவி செய்வது என திட்டமிட்டு கடந்த 8 ஆண்டுகளாக பொது சேவையில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு சில நல்லுள்ளங்களுடன் இணைந்து கலை இரவு நடத்தி வந்துள்ளார் நீலாய் எம்.ஜி.ஆர் வேலு. அதன் வழி கிடைக்கப்பெறும் அறநிதியினை வசதிக்குறைந்தவர்களுக்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவ்வாண்டு நடைப்பெறவுள்ள கலை இரவின் வழி இருசிறுநீரக செயலிழப்பு நோயினால் சுமார் 5 மாதங்களாக பாதிக்கப்பட்டிருக்கும் சாந்தி லூர்துசாமிக்கு இந்த நிகழ்ச்சியின் வழி கிடைக்கப்பெறும் அறநிதியினை அவரின் சிகிச்சைக்காக வழங்கவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நீலாய் எம்.ஜி.ஆர். வேலு குறிப்பிட்டார்.


எம்.ஜி.ஆர். வேலுவின் கலை இரவு வருகின்ற 21 ஆம் திகதி இரவு 7 மணிக்கு நீலாய் செம்பாக்கா பண்டார் பாரு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகையாளராக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அருள்குமார் வருகையளிப்பதாகவும் இந்நிகழ்வுக்கு இங்குள்ள வட்டார பொதுமக்கள் தங்களின் நல் ஆதரவை வழங்குமாறு நிகழ்ச்சியின் ஏற்ப்பாட்டுக் குழுத் தலைவர் கணேசன் குறிப்பிட்டார்.


எம்.ஜி.ஆர் வேலுவின் சேவையே கண்டு வியப்படைந்து நானும் அவர் செய்யும் அற நிகழ்வுகளுக்கு துணையாக பண ரீதியாகவும் நிகழ்வு மேலாண்மை வாயிலாகவும் துணையாக இருந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பொது சேவையில் ஈடுபட்டு வந்தாலும் இந்த நிகழ்வு பெரிய அளவில் நடத்த உதவிய மலேசிய சமூக நல நல்லின இயக்கத்தின் தேசியத்தலைவர் துவான் காசிம் அவருக்கும் உதவி நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியினை செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் அவர் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் நிகழ்ச்சியின் அழைப்பு அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் குணசீலன் முனுசாமி, பரமேஸ்வரி மாணிக்கம், திரேசா ஏகம்பரம், செல்வராஜ் முனுசாமி, ஆதிலெட்சுமி, சங்கத்தின் உறுப்பினர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவின் செயலவையினர்களும் கலந்துச் சிறப்பித்தனர்.

நீலாய் எம்.ஜி.ஆர் வேலு நிகழ்வில் எம்.ஜி.ஆர் ஆடல் பாடல் மட்டுமில்லாமல் சிங்கப்பூர் சிவாஜி அசோகன், உள்ளூர் நடனமணியும் அண்மையில் பக்காத்தான் சேலை அணிந்து பிரபலமான தேவமலர் ஆறுமுகம் ஆகியோருடன் உள்ளூர் கலைஞர்களும் கலந்துச் சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வு பற்றிய மேல் விபரங்களுக்கு எம்.ஜி.ஆர். வேலு 016-686 5023 அல்லது கணேசன் 012-2267638 என்ற எண்களுடன் தொடர்புக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment