Tuesday 10 July 2018
கிந்தா மாவட்ட பொது இயக்கங்களின் ஏற்பாட்டில் அன்னையர் - தந்தையர் விழா
புனிதா சுகுமாறன்
ஈப்போ-
அன்னையர்- தந்தையரின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் ஆங்காங்கே அன்னையர்- தந்தையர் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் கிந்தா மாவட்டத்தில் உள்ள 35 அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் ஏற்பாட்டில் 8ஆவது முறையாக 'என்ன தவம் செய்தேன் அன்பு பெற்றோரை பெற' என்ற அன்னையர்- தந்தையர் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய நிகழ்வின் தலைவர் ஜெயகோபி, கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும் இந்நிகழ்வில் 8 அன்னையர், தந்தையர் சிறப்பிக்கப்பட்டு அணிச்சல் வெட்டி கொண்டாடப்பட்டது.
மேலும், 3 சிறந்த பொது அமைப்புகளின் தலைவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு பேரா கிந்தா சமூக நட்புறவு மன்றம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.
இது குறித்து பேசிய அவர், 35 பொது இயக்கங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து புது பொலிவுடன் செயல்படுவதற்கு இந்த நட்புறவு மன்றம் வழிவகுக்கும் என அவர் சொன்னார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பேரா சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி, தங்களது பெற்றோரை பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமையாகும். அதனை ஒருபோதும் பிள்ளைகள் மறந்து விடக்கூடாது என்றார்.
இந்நிகழ்வில் பிரிம் இயக்கத்தின் தலைவர் முகமட் அரிப் அலியா, ஃபிராய்டே கிளப் இயக்கத்தின் தலைவர் விக்கி உட்பட சிறந்த இயக்கத்தின் தலைவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வின் பேரா மாநில முன்னாள் மஇகா தலைவர்களாக டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், டான்ஶ்ரீ ஜி.ராஜு உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment