Sunday 8 July 2018

சிலாங்கூர் மாநிலத்தில் டிங்கி சம்பவங்கள் அதிகம்- சுகாதார அமைச்சர்


பெட்டாலிங் ஜெயா-
இவ்வாண்டு தொடக்கம் ஜூன் 30ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநிலம் டிங்கி காய்ச்சலில் முதல் இடத்தை பிடித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூன் 30ஆம் தேதி வரை இம்மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சார்ந்த 18,249 புகார்களும் 14 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. கூட்டரசு பிரதேசம், புத்ராஜெயாவில் 2,779 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் சூல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

கடந்த இரு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இவ்வெண்ணிக்கை 29% சரிவு கண்டுள்ளது.

ஆசியான் டிங்கி தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர் கூறுகையில், இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் மொத்தமாக 32,435 புகார்களும் 53 மரணச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதே காலாண்டில் கடந்தாண்டு 49,726 புகார்களும் 110 மரணச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment