Monday 9 July 2018

மலேசியாவில் தொழில் முதலீட்டாளர் மாநாடு


கோலாலம்பூர்-
உலகத்தமிழ் வர்த்தக சங்கம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் வர்த்தக சங்கங்களை உள்ளடக்கி செயல்படும் வர்த்தக அமைப்பு ஆகும். இவ்வமைப்பானது கோலாலம்பூரில் முதலீட்டாளர் மற்றும் தொழில் முனைவோர் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. இதில்  தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகம் to வர்த்தகம் (B2B)  தொழில் முனைவோர் மற்றும் சுய தொழில் செய்ய முற்படுவோர் கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாட்டின் நோக்கம் பல்வேறு நாடுகளில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும், மலேசிய பொருட்கள் அயலகத்திற்கு ஏற்றுமதி செய்யவும், மலேசியாவிற்க்கு தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்யவும் வழிவகை செய்யப்படுவது ஆகும். மேலும் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு பாதுகாப்பான தொழில் செய்வதெனவும், புதிய தொழில்நுட்பத்தில் போட்டியில்லா தொழில் முனை செய்வது எப்படி? என்பன போன்றவைகள் இம்மாநாட்டில் கருத்துரைக்கப்படும். இம்மாநாட்டிற்கு 20 நாடுகளில் உள்ள வர்த்தக அமைப்புகளில் இருந்து 300 பேரும், B2B வர்த்தகத்திலிருந்து 250 பேரும் வருகை தர உள்ளனர். இந்நிகழ்வில் தொழில் பூங்கா, சுற்றுலா விடுதிகள், உணவு பதபடுத்தும் தொழில், தனியார் விமான நிலையங்கள், சொகுசு கப்பல் போக்குவரத்து, நீர்விளையாட்டு, நீர் நிலைகள் மீது சோலார் மின்உற்பத்தி, மின்சாரத்தில் இயங்கும் சிறியவகை இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போன்ற  தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் ஏற்படுத்தபட உள்ளது . மேலும் மலேசியாவில் உற்பத்தி ஆகாத பொருட்களுக்கு குறிப்பாக உணவகங்களுக்கு தேவையான பொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இறக்குமதி செய்து மலேசிய உணவகங்கள் நேரடி பயனடையும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்யும் தொகைக்கு வரி சலுகைகள், மானியம் போன்றவைகள் பற்றி விளக்க உள்ளனர். இந்நிகழ்விற்கு புதுச்சேரி முதல்வர் திரு நாராயணசாமி , தொழில்துறை அமைச்சர் திரு.ஷாஜகான், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் மலேசிய மாநில மத்திய அரசாங்க உதவியுடன் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள், தொழில் வர்த்தக அமைப்புகள் ஒப்பந்தம் செய்ய உள்ளன என உலக தமிழ் வர்த்தக சங்கத்தலைவர் செல்வகுமார் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
இச்செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் ஹாஜி சுயபு,  தலைவர் -சர்வ தேச நாணய மாற்று பிரிவு, மலேசியா திரு முத்துசாமி தலைவர் - PRIMAS, பெருவிஷன் பெருமாள், சேகரன் உடன் இருந்தனர்.மேல் விவரங்களுக்கு :  presidentwtcc@gmail.comச்

No comments:

Post a Comment