Wednesday 11 July 2018

ஸாகீர் நாய்க் விவகாரம்: யாருடைய வற்புறுத்தலுக்கும் அடிபணிய மாட்டோம்- துன் மகாதீர்


கோலாலம்பூர்-
மத போதகர் ஸாகீர் நாய்க் விவகாரத்தில் யாருடைய நெருக்குதலுக்கும் அரசாங்கம் அடிபணியாது என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது கூறினார்.

ஸாகீர் நாய்க் விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை எழுப்பி வருவதை அறிந்துள்ளேன். ஆனால் இந்நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள ஒருவரை பலரில் வற்புறுத்தலுக்கு இணங்க வெளியேற்ற முடியாது.

இங்கு ஏதேனும் தவறுகள் இழைக்கப்படும் வரையில் அவர் (ஸாகீர் நாய்க்) இங்கேயே இருப்பார் என குறிப்பிட்ட துன் மகாதீர், இவ்விவகாரம் தொடர்பில் யாருடைய வற்புறுத்தலுக்கும் அடிபணிய மாட்டோம் என துன் மகாதீர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment