கோம்பாக்-
கடத்தி செல்லப்பட்டதாக போலீஸ் புகார் செய்யப்பட்ட மூன்று மாத கைக்குழந்தை பராமரிப்பாளரின் வீட்டு குளிர்பதனப் பெட்டிக்குள சடலமாக மீட்கப்பட்டது.
பத்துகேவ்ஸ், கம்போங் நக்கோடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று மாத கைக்குழந்தையான அடாம் ரைக்கால் முகம்மட் சுபி குழந்தை பராமரிப்பாளர் இல்லத்திலிருந்து அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
அது தொடர்பான விசாரணையின்போது பராமரிப்பாளர் கொடுத்த வாக்குமூலத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட, அவரது வீட்டினுள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் குளிர்பதனப் பெட்டியில் முழு ஆடை அணிந்திருந்த குழந்தையின் உடல் ஒரு பச்சை நிற பையில் வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது என கோம்பாக் மாவட்ட போலீஸ் அதிகாரி அலி அகமட் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 33 வயது மதிக்கத்தக்க குழந்தை பராமரிப்பாளரையும் அவரது 36 வயது நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டப்பிரிவு 302இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment