Monday 9 July 2018

செயிண்ட் பிளோமினா தமிழ்ப்பள்ளியின் விருதளிப்பு விழா


ரா.தங்கமணி

ஈப்போ-
செயிண்ட்  பிளோமினா தமிழ்ப்பள்ளியில் கடந்த நான்காண்டுகளில் யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான விருதளிப்பு விழா நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது.

செயிண்ட் பிளோமினா கல்வி அறவாரியம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்  37 மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதில் முதல் பிரிவில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 19  மாணவர்களுக்கு அரை பவுன் தங்கம் வழங்கப்பட்டது. ஏனைய 18 மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு  அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய அறவாரியத்தின் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் உரையாற்றுகையில்,  கடந்த நான்காண்டுகளாக இந்நிகழ்வு சில காரணங்களால் நிகழ்த்தப்படாமல் இருந்தது.

தற்போது 2014 முதல் 2017ஆம் ஆண்டு வரை யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.

மாணவர்களின் கல்வி தூண்டுதலுக்கு ஏதுவாக அமைக்கப்பட்ட செயிண்ட் பிளோமினா கல்வி அறவாரியம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், சபாய் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி, மகப்பேறு மருத்துவர் வ.ஜெயபாலன், டாக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர்.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி சங்கரி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயசீலன் உட்பட பிரமுகர்களும்  பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment