Sunday 8 July 2018

தொழிலாளர் பிரச்சினைகளை தீர்க்க சேவை முகப்பிடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் குலசேகரன்



ரா.தங்கமணி

ஈப்போ-
பி40 பிரிவு மக்களுக்கு உதவும் வகையில் சமூக பாதுகாப்பு இலாகா (சொக்சோ), ஆள்பல இலாகா (JTK), தொழிலாளர் சுகாதார, பாதுகாப்பு இலாகா (JKKP) ஆகியவற்றின் சேவை முகப்பிடங்களை மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் இன்று திறந்து வைத்தார்.

தொழிலாளர் வர்க்கம் எதிர்நோக்கும் பல்வேறு தொழிலாளர் பிரச்சினைகளை எதிர்கொள்ள இத்தகைய திட்டம் ஆக்கப்பூர்வமாக அமையும்.

சேவை முகப்பிடங்களின் வழி இம்மூன்று இலாகாக்களும்  களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ முடியும் என குலசேகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

தொழிலாளர் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி தெரியாமல் பலர் தடுமாறுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளின் வழி அப்பிரச்சினைகளை களைவதற்கான வழிவகைகளை மக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இதுபோன்ற சேவை மையங்கள் நாடு முழுமையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளை சந்தித்து தங்களது பிரச்சினைகளுக்கு அவர்கள் தீர்வு காண வழிவகுக்கும் என இன்று கம்போங் தாவாஸ் சந்தை பகுதியில் சேவை முகப்பிட மையத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment