Friday 6 July 2018

இரு பைகளில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட உடல்; போலீசார் மீட்டனர்


கோலாலம்பூர்-
இரு வேறு பைகளில்  பெண்ணில் உடல் துண்டு துண்டாக வெட்டி கிடந்ததை மீட்ட போலீசார் சவப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.

இங்கு ஜாலான் ஈப்போவுக்கு அருகிலுள்ள கோம்பாக் ஆற்றின் கரையில் கிடந்த பை ஒன்றில் கால் வெளியே தெரிவதை கண்ட மரங்களுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்த ஆடவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  முதல் பை மீட்டதோடு அங்கிருந்து 50 மீட்டர் தொலைவில் மற்றொரு பையையும் மீட்டனர்.

கண்டெடுக்கப்பட்ட முதல் பையில் கை, கால், தலை ஆகியவையும் இரண்டாவது பையில் வேறு உடல் பாகங்களும் இருந்தன.  'இவ்விரண்டு பைகளிலும் உள்ள உடல் உறுப்புகள் ஒரே நபருக்குச் சொந்தமானதா? என்பது இன்னமும் உறுதிபடுத்தவில்லை. அதோடு இறந்தவரின் பாலினமும் அவர் யார் என்ற அடையாளமும் இன்னும் காணப்படவில்லை என டாங் வாங்கி மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ரூடி அப்துல்லா கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இரண்டு ஆடவர்களிடமும் ஒரு பெண்ணிடமும் வாக்குமூலம் பெறபட்டதாக அவர் சொன்னார்.

இவ்வழக்கை போலீசார் குற்றவியல் பிரிவு 302இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் காணாமல் போனால் அது குறித்து பொதுமக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment