Thursday 5 July 2018
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் டத்தோஶ்ரீ நஜிப்
கோலாலம்பூர்-
1எம்டிபி விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இன்றுக் காலை 8.25 மணியளவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட டத்தோஶ்ரீ நஜிப் பின்னர் நீதிமன்ற அறைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
டத்தோஶ்ரீ நஜிப் அழைத்து வருவதை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் குவிந்தனர்.
நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட டத்தோஶ்ரீ நஜிப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என நம்பப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment